இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு, 36 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,547 பேர் குணமடைந்துள்ளனர். 543 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 36 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.