கர்நாடகாவில் 10,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..இன்று 397 பேருக்கு கொரோனா.!
கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 397 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,118 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,118 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 149 பேர் இன்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 6151 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அத பாதிப்பு எண்ணிக்கை 4,40,215லிருந்து 4,56,183 ஆக அதிகரித்து உள்ளது.மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190லிருந்து 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,011லிருந்து 14,476 ஆக அதிகரித்து உள்ளது.