இந்தியாவில் உச்சத்தை எட்டும் கொரோனா..பாதிப்பு 5.48 லட்சத்தை கடந்தது.!
உலகளவில் 10, லட்சத்தை கடந்தது கொரோனா, இந்தியாவில் 5.48 லட்சத்தை கடந்தாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா மேலும் 12,010 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,475 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,21,723 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில், 3,940பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 82,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹரியானா
ஹரியானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மொத்தமாக 8,917 குணமடைந்துள்ளனர், மேலும் 72 பேர் வென்டிலேட்டர் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி
டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 83,077ஆக உயர்ந்துள்ளது.
கேரளா
கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 4,189-ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தில் என்றும் இல்லாத அளவாக நேற்று மட்டும் 1,267 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,190 ஆக அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 5493 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,64,626 ஆக உயர்ந்துள்ளது.