#Coronalive: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,237 பேருக்கு கொரோனா ,334 இறப்புகள் – இதுவரை 52% பேர் குணமடைந்துள்ளனர்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 12,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,66,946 அதிகரித்துள்ளது .நேற்று மட்டும் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 12,237 ஆக அதிகரித்துள்ளது .இதுவரை 52% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இன்னும் 1,60,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
தமிழக நிலவரம் :
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 1,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா நிலவரம் :
கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,734 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 344 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 4804 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளா நிலவரம் :
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு நன்கு செயல்பட்டு வந்தது. தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,697ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று 90 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 1,326பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 20 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர. தற்போது வரையில் 1,351 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.