கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 666 ஆக உயர்வு.!
கேரளாவில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனா கண்டறியப்பட்ட 24 பேரில் 23 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்றும் மீதமுள்ள 1 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இதுவரை 666 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 502 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் இதுவரை 48,543 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, 46,961 பேருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. தற்போது கண்காணிப்பில் 74,398 பேர் இருக்கின்றார்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
May 20 #COVID19 Update
Today saw 24 new cases. (23 of these are import cases & 1 contact case).
5 have recovered (the total number of recovered is at 502).
????74,398 under observation
???? 48,543 tested; 46,961 are -ve
???? 6,090 covered in sentinel surveillance; 5,728 are -ve. pic.twitter.com/x9ZZgus5xX— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 20, 2020