வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக மே 31 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்களும் மூடப்பட்டு, நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், சிபிஎஸ்இ மற்றும் நீட் போன்ற தேர்வுகளின் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சில தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கேரளாவில் தற்போது குறைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்க விரும்பவில்லை என்று அம்மாநில அரசு, தேதிகள் ஏதும் குறிப்பிடாமல் அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளது. நாட்டிலேயே கேரளா தான் குறைவான பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் கொண்டுள்ளது. இதனிடையே, மே 26 ஆம் தேதி பள்ளி தேர்வுகளும், ஜூலை மாதத்தில் பல்கலைக்கழக தேர்வுகளும் நடைபெற இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. தேர்வு எழுந்தும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…