ஆந்திராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,137 ஆக உயர்வு.!
ஆந்திராவில் நேற்று புதிதாய் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,137 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் அம்மாநிலத்தில் 47 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1142 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மேலும், 948 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.