கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆகவும் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். இங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,915 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 432 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் 1,593 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதையடுத்து அதிக பாதிக்கப்பட்ட மாநிலமாக குஜராத்தில் 4,082, டெல்லியில் 3,439, மத்திய பிரதேசத்தில் 2,660, ராஜஸ்தானில் 2,438, தமிழ்நாட்டில் 2,323 ஆக உள்ளது. இதனிடையே உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32,44,586 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 2,29,182 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 32,44,586 பேரில் 10,16,419 பேர் குணமடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…