இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,792 ஆக உயர்வு.!

Default Image

உலகளவில் கொரோனாவால் 22,76,098 பேர் பாதிக்கப்பட்டு, 1,56,114 பேர் உயிரிழந்ந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பும் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் முடிவடைய இருந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவ்வரைபடி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 லிருந்து 14,792 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480 லிருந்து 488 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,76,098 ஆகவும், பலியானோர் எண்ணிக்கையில் 1,56,114 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,82,527 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
Good Bad Ugly Teaser
PAK vs BAN Champions Trophy
Seeman House
tn rain
Rohit sharma
vijay yesudas and kj yesudas