இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,500 எட்டியது.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,041,106 ஆகவும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,203 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து 222,332 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2301 இருந்த நிலையில் தற்போது மேலும் 246 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2547 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் 163 பேர் எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 62 எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் , இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 335 பேரும் , தமிழ்நாட்டில் 309 பேரும் , கேரளாவில் 286 , டெல்லியில் 219 , கர்நாடகாவில் 124 , ராஜஸ்தானில் 167பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025