கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புள்ளாகியதுடன், 300க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 627,168 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 18,225 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 21,948 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 377 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர இதுவரை 379,902 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 229,041 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் குறைய வேண்டுமானால், நாம் வீட்டில் இருப்போம், தனித்து இருப்போம், விழித்திருப்போம்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…