இந்தியாவில் கொரோனா பாதிப்பு 909 ஆக அதிகரிப்பு.!
உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,458 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,373 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காலை 10 மணி வரை 873 ஆக இருந்தது.
தற்போதைய நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது என்றும் இதில் 862 பேர் இந்தியர்களும், 47 பேர் வெளிநாட்டினர் என மொத்தம் 909 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 19 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேரும், கேரளாவில் 176 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.