இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35,043 லிருந்து 35,365 ஆக அதிகரிப்பு.!
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35,043 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35,043 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,152 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35,365 பேரில் 9,065 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுவும், கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் 549 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிராவில் இதுவரை 10,498 பேர் பாதிக்கப்பட்டு, 459 பேர் பலியாகியுள்ளனர். இதுதான் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம். இதையடுத்து குஜராத்தில் 4395 பேர் பாதிக்கப்பட்டு, 214 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 3515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 2719, ராஜஸ்தானில் 2584, தமிழ்நாட்டில் 2323, உத்தரபிரதேசத்தில் 2281 என அதிகபட்சமாக இந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.