இந்தியாவில் கொரோனா பலி 169..பாதிப்பு எண்ணிக்கை 5,865 ஆக உயர்வு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவது, தவிர வேற எதற்காகவும் வெளியில் வர கூடாது என்று மத்திய மாநில அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 5,734 லிருந்து 5,865 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 லிருந்து 169 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 478 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,135 பேரும், தமிழ்நாட்டில் 738 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.