இந்தியாவில் 111 பேர் பலி..கொரோனா பாதிப்பு 4067 லிருந்து 4281 ஆக உயர்வு.!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 லிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4281 பேரில் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 523, தெலுங்கானா 321, கேரளா 314, உத்தரபிரதேசம் 305 போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் தாக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகமாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, சீனா, பிரான்ஸ், ஈரான், ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதிப்பும், பலியும் உயர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,88,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70,567 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 2,72,024 பேர் குணமடைந்துள்ளார்கள்.