இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது.!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 937 ஆகவும் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக நிறைவடைய இருக்கும் ஊரடங்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. அதாவது, தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேர் பாதிக்கப்பட்டு, 369 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 30,83,453 ஆகவும், பலி எண்ணிக்கை 2,12,498 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து இதுவரை 9,35,205 பேர் குணமடைந்துள்ளார்கள். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 10,10,507 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 56,803 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 1,39,162 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.