டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14465 ஆக உயர்வு.!
டெல்லியில் மேலும் 412 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 14465 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 14465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 183 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6954 ஆக உள்ளது. தற்போது 7223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
????Delhi Health Bulletin – 26th May 2020????#DelhiFightsCorona pic.twitter.com/gzHv7rbzVo
— CMO Delhi (@CMODelhi) May 26, 2020