இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

இந்தியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா, இதுவரை 81,997 பேர் பாதிப்புக்குள்ளாக்கியதோடு, 2,649 பேர் உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் பல நாடுகளை ஆக்கிரமித்து நாடுகளின் மக்கள் தொகையை அறவே குறைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டபாடில்லை.
இதுவரை இந்தியாவில் 81,997 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 81,997 பேரில் 27 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி வீடு திரும்பியும் விட்டனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 3942 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தற்பொழுது 51,379 பேர் தான் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025