மகாராஷ்டிராவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு .!
கொரோனா வைரஸ் ஐரோப்பா நாடுகளிடம் தனது கோரமுகத்தை அதிகம் காட்டிவருகிறது. அதேபோல தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மத்திய , மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 292 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 690, தமிழ்நாடு 571, டெல்லி 503, தெலுங்கானா 321, கேரளா 314 ஆகிய மாநிலங்களில் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் , உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.கொரோனாவால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 45 பேர் இறந்துள்ளனர். 42 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்த மாநிலத்தில் குணமடைந்தவர்களை விட இறந்தவர்கள் தான் அதிகம். இந்த மாநிலம் போல வேறு இந்த மாநிலமும் அதிகம் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.