இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 200-ஐ தாண்டியது.!
இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 லிருந்து 206 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க தவிர வேற எதற்காகவும் வெளியில் வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சில மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீடிப்பது குறித்து பேசப்படும் என்று தகவல் வந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 6,761 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்து, 206 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.