மகாராஷ்டிராவில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.!
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிவப்பு, ஆரஞ்சி, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரசால் 37,336 பாதிக்கப்பட்டு, 1218 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை 9951 பேர் மீண்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தண்டியுள்ளது. அதாவது, நேற்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று மும்பை, புனே போன்ற பகுதிகளில் வைரஸின் தீவிரம் அதிகமாக இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.