இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 3,303 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 3,377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,72,176 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 39 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,23,753 ஆக பதிவாகியுள்ளது.கடந்த ஒரே நாளில் 2,496 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,30,622 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17,801 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,88,65,46,894 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 22,80,743 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…
ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள…
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…