கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் அதிகமாக கொரோனா பரவுவதால் சமீபத்தில் முதல்வர் எடியூரப்பா தனது வீட்டில் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், முதல்வர் எடியூரப்பாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எடியூரப்பா தனது ட்விட்டரில் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், இன்று நான் கொரோனா பரிசோதிக்கப்பட்டேன். எனது அறிக்கையில் பாசிட்டிவ் என வெளிவந்துள்ளது. நான் நன்றாக இருக்கிறேன் என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எடியூரப்பாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…