கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!
கடந்த 2020-ஆம் ஆண்டு முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இந்த கொரோனாவால், கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, சமீப காலமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு சந்தர்ப்பவாதி – கேரளா முதல்வர்
இருப்பினும், அங்கங்கே கொரோனாவின் தாக்கம் இருந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, அங்கு மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.