கேரளாவில் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா..ஒரே நாளில்152 பேருக்கு கொரோனா.!
இன்று கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 3,603 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சில நாட்களாக கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் பாதிப்பு பதிவாகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,603 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,691 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.