73.05 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எவ்வளவு பேர்?
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 73.05 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 67,988 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 694 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 7,305,070 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,11,311 பேர் உயிரிழந்துள்ளனர். 6,380,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 813,303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.