கொரோனா பாதிப்பு – உலக நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
இந்தியாவில் ஒரே நாளில் 3,15,925 பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்டு உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது இந்தியா.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 315,802 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 15,930,965 உயர்ந்துள்ளது. இதுவரை 1,34,54,880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் ஒரு நாள் பாதிப்பில் உச்சம் தொட்ட நாடாக மாறியது இந்தியா. கடந்த ஜனவரி 8ம் தேதி அமெரிக்காவில் 3,07581 பேர் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 3,15,925 பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்டு உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது இந்தியா.