இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், ,உலக அளவில், 14,189,223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 599,341 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,455,206 குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், 1,040,457 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,285 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 654,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரையில், மஹாராஷ்டிரா மாநிலம் இந்த வைரஸ் பாதிப்பில் நிலையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மஹாராஸ்டிராவில், 2,92,589 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 1,56,369 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.