1 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உயர்ந்து, உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளவில்லை. உலகின் பல நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் பாதிப்பால் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். அது போல இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே சென்றதால், பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததுடன் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையையும் இழந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக தான் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக செப்டெம்பர் மாதங்களில் எல்லாம் உச்ச நிலையை அடைந்திருந்தது. நாளொன்றுக்கு 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் புதிதாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர், உயிரிழப்பு ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக தினமும் இருந்தது. ஆனால், தற்பொழுது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வுகளை அரசாங்கம் கொடுத்திருந்தாலும், கொரோனாவின் வீரியம் குறைந்து கொண்டே தான் செல்கிறது.
இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை தற்பொழுது 1 கோடியை கடந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காமுதலிடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 342 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் செல்கிறது. தொடர்ந்து அரசு கூறும் விதிமுறைகளை கடைபிடித்து முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்தி கொள்வோம். கொரோனா இல்லாத நாடக இந்தியாவை உருவாக்குவோம்.