இந்தியாவில் கொரோனா பாதிப்பு! 28 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191லிருந்து 11,92,915ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084லிருந்து 28,732 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,24,578லிருந்து 7,53,050ஆக அதிகரித்துள்ளது.