நாளுக்கு நாள் இந்தியாவில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகளவில் குறைந்துகொண்டே வருகிறது.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 45,158 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 463 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் 7,909,050 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 119,030 பேர் உயிரிழந்துள்ளனர், 7,133,994 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 656,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.