உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சோதனை கட்டணத்தை தற்போது ரூ .1,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சோதனைக்கு பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கருவிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலை குறைந்து வருவதால், உத்தரபிரதேசத்தில் அனைத்து தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை கட்டணத்தை ரூ .2,500-லிருந்து ரூ .1,600 ஆக குறைத்துள்ளது.
கொரோனா சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக் கருவிகளின் விலைகள் குறைந்துவிட்டன. எனவே, சோதனையின் விலை குறித்த ஏப்ரல் உத்தரவு திருத்தப்பட்டுள்ளது. அதன் படி, தற்போது சோதனையின் அதிகபட்ச விலை ரூ .1,600 ஆக இருக்கும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் அமித்அமித் மோகன் பிரசாத் தெரிவித்தார். இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அறிக்கையின் படி, கொரோனா தொற்றை கண்டறியும் சோதனையின் விலை ரூ .1,600 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொற்றுநோய் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் அவர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையை குறைப்பதன் நோக்கம் அதிகபட்ச மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா சோதனையின் விலை குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். தனியார் ஆய்வகங்கள் முதலில் ஆர்டிபிசிஆர் வழியாக சோதனைக்கு அனுமதிக்கப்பட்டபோது, ஒவ்வொரு சோதனைக்கும் கட்டணம் ரூ .4,500 ஆக இருந்தது, பின்னர் ஏப்ரல் மாதத்தில் ரூ .2,500 ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…