இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறத்தொடங்கியுள்ளது..! – IMA தலைவர் எச்சரிக்கை.!
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சமூக பரவலாக மாற தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியிலும் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ (Indian Medical Association – IMA) ஐ.எம்.ஏ-வின் தலைவரான வி.கே.மொங்கா அவர்கள் ANI சேனலில் கூறியதாவது, ‘ இந்தியாவில் தற்போது கிராமப்புறங்களில் சமூக பரவல் தொடங்கியுள்ளதாக’ குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘ இந்தியாவில் தினமும் 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்திய நகர்ப்புறங்களை தாண்டி கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது.’
‘டெல்லில் கிராமப்புறங்களில் பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற கொரோனா தொற்றுக்களை எவ்வாறு கட்டுப்படுத்த போகிறார்கள் என தெரியவில்லை.’என கூறியுள்ளார்.