கொரோனா வைரஸ் ! இன்று சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டம் ?
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் (SAARC) கூட்டம் இன்று நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.தெற்காசிய நாடுகள் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது.எனவே பிரதமர் மோடியில் அழைப்பை ஏற்று தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் காணொலியில் இன்று மாலை ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.