கொரோனா பரிதாபங்கள் : குச்சியை வைத்து மாலை மாற்றிய திருமண ஜோடி !
கொரோனா பரவலை தடுக்க குச்சியை வைத்து மாலை மாற்றிய திருமண ஜோடி.
கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் திருமணம், கோவில் திருவிழா மற்றும் கூட்டம் சேரும் அனைத்து விசேஷங்களும் நடத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ,மும்பையை சேர்ந்த திருமண ஜோடி ஒன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அவர்கள் குச்சியின் மூலமாக திருமண மாலையை மாற்றிக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் இந்த திருமணத்தை கிண்டல் செய்து வருகின்றனர். திருமணத்தையே இப்படி செய்பவர்கள் முதலிரவை எவ்வாறு செய்வார்கள் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
https://twitter.com/Madan_Chikna/status/1256274696603086848?s=20