கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல! நம்முடைய பாவங்களுக்காக கடவுள் கொடுத்த தண்டனை! – சமாஜ்வாதி கட்சி எம்.பி
கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிகுர் ரஹ்மான் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை. கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த வழி சர்வவல்லவரிடம் மன்னிப்பு கோருவது தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், பக்ரீத் தினத்தன்று, சந்தைகளை திறக்க வேண்டும். இதனால் மக்கள் விலங்குகளை அங்கிருந்து வாங்க முடியும். கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் பிரார்த்தனை செய்ய மசூதிகள் மற்றும் ஈட்காக்கள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று மீண்டும் வலியுறுத்தினார். மசூதியில் பிரார்த்தனை செய்ய நிர்வாகம் அனுமதித்தால், எல்லோரும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், பிரார்த்தனை செய்யும் போது முககவசம் அணிவதையும் உறுதி செய்வோம். அவர்கள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் எங்கள் வீடுகளிலிருந்து ஒரு பிரார்த்தனை செய்வோம். மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.