இந்தியாவில் 8447 பேருக்கு கொரோனா உறுதி.! பலி எண்ணிக்கை 273-ஆக உயர்வு.!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 7529-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 8500-ஐ நெருங்கியுள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,447-ஆகவும், 765 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர் எனவும், 273 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது மேலும் நீட்டிக்க மாநில அரசுகள் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி வருகின்றன. ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கை நீட்டித்து அந்தந்த மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.