பயணீக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தால் விமானி ஜன்னல் வழியே குதித்து தப்பியோடிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
புனேவில் இருந்து டில்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணியர் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க கூடும் என்று சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விமானி காக்பிட் எனப்படும் தனது அறையின் ஜன்னல் வழியாக வெளியேறி தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தெரிவித்துள்ள ஏர் ஏசியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஏர் ஏசியா விமானம் சில பயணிகளை கொண்டு புனேவில் இருந்து 20 ம் தேதி தலைநகர் டில்லிக்கு வந்தது. விமானத்தில் பயணித்த வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமானம் தனியாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கருதிய பயணியர்கள் முன்வாசல் வழியாகவும், மற்றவர்கள் எல்லோரும் பின்வாசல் வழியாகவும் இறங்கி சென்று உள்ளனர். பாதிக்கப்பட்டதாக கருதப்பட்ட நபர்கள், காக்பிட் அறையின் பின் உள்ள வரிசையில் பயணம் செய்ததால் தான் விமானி காக்பிட்டிலிருக்கும் ஜன்னல் வழியாக, விமானத்தில் இருந்து வெளியேறிச் சென்றார் என்று அவர் கூறினார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…