தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியது : மாநில சுகாதாரத் துறை இயக்குநர் சஞ்சீவ ராவ்

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியது.
தெலுங்கானாவில் 49,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் இது 50 ஆயிரத்தை கடந்து விடும். நகர்ப்புறங்களில் சமூகப் பரவல் தொடங்கியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை இயக்குநர் சஞ்சீவ ராவ் கூறியுள்ளார். மேலும், ஹைதராபாத்தில் போலீஸார், ஊடகத் துறையினர், சுகாதார துறையினர், துப்புரவு தொழிலாளர்கள் என பலருக்கும் கரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில், மாநில சுகாதார சேவைகளின் உயர் மேலாளர் டாக்டர் சீனிவாச ராவ் அவர்கள் கூறுகையில், அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத “பொறுப்பற்ற மக்கள்” மீது சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார். பெரும்பான்மையான மக்கள் கவனமாக இருக்கும்போது, இல்லாத மற்றவர்களும் உள்ளனர் என்று கூறினார்.
மேலும், வெளியில் வேலைக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற செயல்பாடுகளில் தவறுகின்றனர் என்றும், காய்ச்சல், சளி அல்லது பிற அறிகுறிகள் போன்ற உடல்நலக்குறைவு அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் என்றும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அருகிலுள்ள சமூக சுகாதார மையம் அல்லது மருத்துவமனைக்குச் சென்று தங்களை பரிசோதிக்குமாறும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025