தற்போது கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த கொரோனா வைரசால் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது.முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவில் இருந்து கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் இந்தியா வந்தபோது இந்தியாவில் அவருக்கு தான் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்டார்.
இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர்.பின்னர் அவரை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதுடன் ,தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இதன் பலனாக அவருக்கு நடந்தப்பட்ட சோதனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை நீங்கியது தெரியவர அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ வாரியம் கூறியது. பின்னர் அந்த மாணவி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதற்குமுன் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…