கொரோனா வைரஸ் ..! பயோமெட்ரிக் வருகை தற்காலிகமாக நிறுத்தம்..!
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 3,200 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவை சார்ந்த 3 கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வீடு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் , தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
தற்போது இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 28 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள பயோமெட்ரிக் வருகை முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு உத்தரவு பிறப்பித்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.