உலகையே கசக்கி பிழியும் கொலைகாரன்–பிறந்த குழந்தைக்கு “கொரோனா”வின் பெயர்!ஏன் வைத்தேன்??-பெற்றோர் விளக்கம்

Published by
kavitha

இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைக்கு, கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்க்காக இப்பெயர் சூட்டப்பட்டதாக பெற்றோர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் 193 நாடுகளை தனது பாதிப்பால் சுக்குநூறாக நொருக்கி உள்ளது.அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இரட்டை இலக்கத்தை தொட்டுவிட்டு 10ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையில் 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 548 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.மத்திய,மாநில அரசுகள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.தற்போது  கொரோனா தொடர்பான சுவரஸ்சியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.உ.பி., மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, இந்த வைரஸின் அதாவது ‘கொரோனா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை குழந்தையின் பெற்றோர் சம்மதத்துடன், அவரது மாமா திரிபாதி என்பவர் குழந்தைக்கு இப்பெயரை சூட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகின்ற உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. ஆனால் அது உலக மக்களிடையே  சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொரோனாவை எதிர்த்து உலக மக்களை எல்லாம் ஒன்றாக இணைத்துள்ளது. ஒற்றுமையின் சின்னமாக தீமையை எதிர்த்து போராடுபவளாக  இக்குழந்தை இருப்பார்’ என்று தெரிவித்தார்.இந்த பெயர் குறித்து சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து   இக்குழந்தை உத்திர பிரதேசம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திலும்  பிரபலமாகி உள்ளது.

Published by
kavitha

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

35 minutes ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

1 hour ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

1 hour ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

2 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

3 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

3 hours ago