உலகையே கசக்கி பிழியும் கொலைகாரன்–பிறந்த குழந்தைக்கு “கொரோனா”வின் பெயர்!ஏன் வைத்தேன்??-பெற்றோர் விளக்கம்

இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைக்கு, கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்க்காக இப்பெயர் சூட்டப்பட்டதாக பெற்றோர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் 193 நாடுகளை தனது பாதிப்பால் சுக்குநூறாக நொருக்கி உள்ளது.அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இரட்டை இலக்கத்தை தொட்டுவிட்டு 10ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையில் 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 548 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.மத்திய,மாநில அரசுகள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.தற்போது கொரோனா தொடர்பான சுவரஸ்சியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.உ.பி., மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, இந்த வைரஸின் அதாவது ‘கொரோனா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை குழந்தையின் பெற்றோர் சம்மதத்துடன், அவரது மாமா திரிபாதி என்பவர் குழந்தைக்கு இப்பெயரை சூட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகின்ற உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. ஆனால் அது உலக மக்களிடையே சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொரோனாவை எதிர்த்து உலக மக்களை எல்லாம் ஒன்றாக இணைத்துள்ளது. ஒற்றுமையின் சின்னமாக தீமையை எதிர்த்து போராடுபவளாக இக்குழந்தை இருப்பார்’ என்று தெரிவித்தார்.இந்த பெயர் குறித்து சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து இக்குழந்தை உத்திர பிரதேசம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திலும் பிரபலமாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025