144 தடையில் பாரதம்..பிரதமர் தலைமையில் டெல்லியில் அவசர அமைச்சரவை..கூட்டம்
உலகம் முழுவதும் தனது தொற்றால் கொன்று குடித்து வரும் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் தற்போது தலைநகர் டெல்லியில் அவரச அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து திவீர ஆலோசணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.