டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.30 லட்சமாக உயர்வு!

Default Image

டெல்லியில் இன்று 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.30 லட்சமாக உயர்வு.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. அந்தவகையில், அங்கு புதிதாய் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,30,606 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,807 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,14,875 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,827 ஆக அதிகரித்துள்ளது.  அங்கு 11,904 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்