மும்பையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.29 லட்சத்தை நெருங்கவுள்ளது!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்ட்ரா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பையில் ஓரே நாளில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,726 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு ஒரே நாளில் 719 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,03,468 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 47 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,130ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17,828 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைககம் தெரிவித்துள்ளது.