கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே தொற்று பரவும் அபாயம் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தொற்று பாதிப்பு உள்ள ஒரு நபர் தும்மினாலும் இருமினாலும் எச்சில் வழியாக கிருமி காற்றில் பரவி மற்றவர்களை பாதிக்கும் என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் பேசினாலே தொற்று பரவும் அபாயம் உள்ளது அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது, தொற்று பாதித்த ஒரு நபர் தும்மல் அல்லது இருமல் போன்றவற்றை செய்யும் பொழுது அவரிடமிருந்து வெளியாக கூடிய பெரிய எச்சில் துகள்கள் 2 மீட்டர் தூரத்திற்குள் கீழே விழுந்து விடுமாம்.
ஆனால் அதிக நேரம் உயிருடன் இருக்கக் கூடிய ஏரோசோல் என அழைக்கப்படக் கூடிய சிறிய எச்சில் துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவக் கூடியது எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஏரோசோல் துகள்கள் நாம் பேசும் போது தான் அதிகளவில் வெளியாகுமாம். எனவே தான் மக்கள் அதிகமாக கூட கூடிய இடங்கள் காற்று வசதி இல்லாத இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வெளிவரும் ஏரோசோல் துகள் மூலம் கொரோனா மக்களுக்கு வேகமாக பரவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காற்றோட்டமுள்ள இடங்களில் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதால் வீடுகளில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தவடை எப்பொழுதும் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக் கொண்டால் கொரோனாவிலிருந்து நாம் தப்பலாம்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…