“2021 ஜூலைக்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்” – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Default Image

அடுத்தாண்டு ஜூலைக்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இதனை கட்டுக்குள் கொண்டுவர 5 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நிறுவனங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பாக இன்று அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது உரையாற்றிய அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை உலகிலே இந்தியாவில் தான் அதிகம் எனவும், உயிரிழந்தோரின் சதவீதம் இந்தியாவில் தான் குறைவு என்று கூறினார்.

மேலும் உரையாற்றிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவது 3 நாட்களிலிருந்து 75 நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா தடுப்பூசி அடுத்தாண்டு விநியோகத்திற்கு வரும் எனவும், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்