கொரோனா தடுப்பூசி: “இந்தியாவை உலகமே எதிர்பார்க்கிறது” – வெளியுறவுத்துறை அமைச்சர்!
குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க இந்தியாவை உலகமே எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை உருவெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. அதேபோலவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் நோக்கில் இந்தியா, அமெரிக்க, ரஷ்யா, சீனா, உட்பட பல நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக இறங்கியுள்ளதால், இந்தியாவின் குறைந்த விலை கொரோனா தடுப்பூசியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். மேலும் கூறிய அவர், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் உறுதியளித்துள்ளதாக தெரிவித்த அவர், தடுப்பூசி உருவாக்கும் சர்வதேச முயற்சிகளின் மையப்புள்ளியில் இந்தியா இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.