கொரோனா தடுப்பூசி – மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.